Garlic pickle in Tamil | பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி | How to make garlic pickle without preservatives

Garlic pickle in Tamil | பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி | How to make garlic pickle without preservatives

நாம் இன்று பூண்டு ஊறுகாய் எப்படி சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம் என்று பார்கலாம்.பெரும்பாலும் கடைகளில் டப்பாவில் அடைத்து விற்கப்படும் பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க பிரசர்வேட்டிவ்ஷ் எனும் வேதி பொருட்களை கலக்கின்றனர்.வேதி பொருட்கள் நம் உடலில் சேர சேர உடம்பிற்கு தீங்கு விளைவிகின்றன.முடிந்த வரை பயன்பாடுகளின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.இங்கு நாம் எந்த வேதிப்பொருள் பயன்பாடு இல்லாமல் பூண்டு ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.



பூண்டு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்

தோலுரித்த பூண்டு  - 5

கடுகு - 1/4 தேக்கரண்டி

கருவேப்பிலை

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

புளி - எழுமிச்சை அளவு

மஞ்சள்தூள்

பெருங்காயம்

ஆயில்


வறுத்து அரைக்க

மல்லி - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டியளவு




*  கடாயில் மல்லி,சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை விளக்கம்

* பூண்டு ஊறுகாய் செய்வதற்கு ,முதலில் ஒரு கடாயில் 5 தேக்கரண்டியளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.எண்ணெய் சூடானதும் தேவையான அளவு கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.

*  தோலுரித்த பூண்டை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.



* பின் வறுத்து அரைத்து பொடி செய்த மசாலா,மிளகாய்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.



* எழுமிச்சை அளவு புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.



*  புளிக்கரைசலை வறுத்த பூண்டுடன் சேர்த்து எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க வைக்கவும்.



* அடுப்பை அனைத்து பூண்டு ஊறுகாய் ஆறியவுடன் கண்ணாடி குடுவையில் போட்டு அடைக்கவும்.


குறிப்பு :

* ஊறுகாயை கண்ணாடி குடுவையில் வைத்து இரண்டு மாதம் வரை வெளியில் வைத்து உபயோகிக்கலாம்.

* தண்ணீர் படாமல் பார்த்து கொள்ளவும்

* புளிக்கரைசலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

* இதனுடன் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

WELCOME TO NEELA KITCHEN

இரண்டே பொருளில் இருமல் முழுமையாக நீங்க இத டிரை பண்ணுங்க

Potato fingers || Crispy potato fingers || Potato Fingers chips || Potato fingers fry || Potato fingers recipe || Potato finger snack || How to make potato finger fry